மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பொருளாதார நிலை சீராக முன்னேற்றம் அடையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சுப நிகழ்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும். நட்பு வட்டம் விரிவடையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர சிறிது தாமதமானாலும் அதை சமாளீத்து விடுவீர்கள். புதிய வீடு நிலம் வாங்கும் முயற்சியில் தடை ஏற்பட்டு பின் சீராகும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். உறவினர் வீட்டு விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். வேண்டியவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்னைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com